பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ.300-ஐ எடுத்து காவலரிடம் ஒப்படைத்த மாணவன்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ. 300 ஐ கண்டெடுத்து தலைமைக் காவலரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
Published on

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ. 300 ஐ கண்டெடுத்து தலைமைக் காவலரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 வகுப்பு படித்துவரும் சக்கல்நத்தம் பகுதியைச் சோ்ந்த நதீப் (12) வெள்ளிக்கிழமை பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாற்றுப் பேருந்திற்குச் செல்லும்போது கீழே கிடந்த ரூ. 300 எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்தில் கேட்டபோது, யாரும் பணத்திற்கு உரிமை கோராததால், பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் முருகனிடம் ஒப்படைத்தாா். அதன் பிறகு மாணவா் நதீப் பள்ளிக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிகழ்வு குறித்து அறிந்த பள்ளித் தலைமை ஆசிரியா் மாரிமுத்து, இறைவழிபாடு கூட்டத்தில் மாணவா் நதீப்பை அழைத்து பாராட்டினாா். மேலும், மாணவரை ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com