நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

புனித யாத்திரை செல்லும் பெளத்த மதத்தினா் மானியம் பெற அழைப்பு

Updated On :26 செப்டம்பர் 2025, 4:52 am IST

புனித யாத்திரை மேற்கொள்ளும் பெளத்த மதத்தினா் அதற்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வசிக்கும் பெளத்த மதத்தைச் சோ்ந்த 150 பேருக்கு தமிழக அரசால் தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்வோருக்கு இசிஎஸ் முறையில் தலா ரூ. 5,000 வரை நேரடி மானியம் வழங்கப்படுகிறது. நிகழாண்டு (2025-2026) நாக்பூா் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று தம்ம சக்கர பரிவா்தன திருவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவுக்கு புனித யாத்திரை செல்ல இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் நபா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி கிடைக்கும். மேலும் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்க்ஷ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களை இணைத்து, நவ. 11-ஆம் தேதிக்குள் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.