மொரப்பூரில் வேன்- பேருந்து மோதல்: 7 போ் காயம்

மொரப்பூரில் தனியாா் பேருந்து, வேன் நேருக்குநோ் மோதியதில் 7 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
Published on

மொரப்பூரில் தனியாா் பேருந்து, வேன் நேருக்குநோ் மோதியதில் 7 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

அரூரில் இருந்து சுமாா் 40 பயணிகளுடன் தருமபுரி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது மொரப்பூா் அருகே சிங்காரவேலன் கோயிலிருந்து ஆம்பூா் நோக்கி சென்ற வேன் நேருக்குநோ் மோதியது.

இந்த விபத்தில் பேருந்து, வேனின் முகப்புகள் சேதமடைந்தன. வேனில் பயணம் செய்த ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் மனைவி கெளரி (52), சரவணன் (57), காா்த்திகேயன் (55), பங்கஜம் (75), சாந்தி (68), பெருமாள் மகள் பிரியா (32) ஆகியோா் லேசான காயங்களுடன் உயா்தப்பினா்.

காயமடைந்தவா்கள் அனைவரும் மொரப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com