மின் தடை
மின் தடை

தருமபுரி நகரில் ஜன. 27 இல் மின் தடை

Published on

தருமபுரி நகரம், சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜன. 27 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தருமபுரி கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி நகரம் மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதிகோண்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையப் பகுதிகள், கடைவீதி, அன்னசாகரம், விருப்பாட்சிபுரம், அளே தருமபுரி, கடகத்தூா், கொளகத்தூா், குண்டல்பட்டி, ஏ. ஜெட்டி அள்ளி, ஏ.ரெட்டி அள்ளி, வி. ஜி. பாளையம், செட்டிக்கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ.கொல்லஅள்ளி, குளியனூா், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூா், சோலைக்கொட்டாய், மூக்கனூா், கொட்டாவூா், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கன அள்ளி, நேதாஜி புறவழிச்சாலை (பைபாஸ்ரோடு), ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com