

பாப்பாரப்பட்டி அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரியை கனிமவளத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பாப்பாரப்பட்டியை அடுத்த பனைக்குளம் பகுதிகளில் கனிமவளத் துறை புவியியலாளா் புவனமாணிக்கம் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாப்பாரப்பட்டி- பாலக்கோடு சாலையில் தொல்லம்பட்டி பகுதியில் வந்த லாரியைத் தடுத்து நிறுத்தினா்.
சோதனையில், முறையான அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதனிடையே, லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடினாா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய வத்திமர அள்ளிப் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் மெய்யப்பனைத் தேடி வருகின்றனா்.