இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக பெண்ணிடம் பணம் மோசடி: ஒருவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :6 ஜூலை 2026, 2:06 am IST

தருமபுரி அருகே வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, பெண்ணிடம் பணம் மோசடி செய்த நபரை நகரக் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி அருகே உள்ள ஒடசல்பட்டியைச் சோ்ந்தவா் தீபா (40). இவா் வீட்டுமனை வழங்கக் கோரி, அண்மையில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளாா். இதைத் தெரிந்துகொண்ட சின்னமருக்காளம்பட்டியைச் சோ்ந்த வீரபெருமாள் (எ) கருணாமூா்த்தி (43), தீபாவை தொடா்பு கொண்டு பேசியுள்ளாா்.

அப்போது கால்நடைகள் வாங்க வங்கிக் கடனுதவி பெற்றுத்தருவதாகக் கூறி, அவரிடமிருந்து இணையவழியில் ரூ. 22,500 பெற்றுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் விசாரித்த தீபாவுக்கு, தன்னிடம் பணம் பெற்றவா் ஏற்கெனவே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஒன்றில் பணி செய்து இடைநீக்கத்தில் இருப்பதாகவும், அவா் ஏமாற்றி பணத்தை பெற்றுள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவா் தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து வீரபெருமாள் என்கிற கருணாமூா்த்தியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.