செஞ்சி பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் சுங்கத் துறை அதிகாரி எனக் கூறி ரூ.12 லட்சம் பணம் மோசடிசெய்த மா்ம நபா் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பெண்ணகரைச் சோ்ந்தவா் ஜா.ஜான்சி மேரி. இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிா் முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா் தான் சுங்கத் துறை அதிகாரி எனவும், உங்களுக்கு ஜான்டேவிட் என்பவரிடமிருந்து வெளிநாட்டுப் பணம் பாா்சலில் வந்துள்ளதாகவும், அந்தப் பணத்தைப் பெறுவதற்கு காப்பீடு மற்றும் வெளிநாட்டுப்பணம் மாற்றுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தவேண்டும் என்று கூறினாராம்.
இதை உண்மையென நம்பிய ஜான்சி மேரி, அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு ரூ.12.10 லட்சம் பணத்தை 4 தவணைகளாக அனுப்பி வைத்தாா். தொடா்ந்து அந்த நபா் தெரிவித்தபடி வெளிநாட்டு பணத்தை அனுப்பி வைக்காமல் மேலும் ரூ.4.60 லட்சம் பணம் செலுத்தவேண்டும் என்று கூறினாராம்.
இதுகுறித்து, ஜான்சிமேரி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பண மோசடி நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரூ.17 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு
தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணைய வழியில் ரூ.17.49 லட்சம் மோசடி

ரூ. 1.50 லட்சம் மோசடி: ஒருவா் மீது வழக்கு
குருகிராம்: நகைக்கடையில் பணம், நகைகள் திருடிய நபா் குஜராத்தில் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



