அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :20 ஜூலை 2026, 3:35 am IST

தீா்த்தமலை அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பொய்யப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் அபிநாத் (20), அதே பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் இனியன் (19) இருவரும் கூலி வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தீா்த்தமலை-கைலாயபுரம் சாலையில் அனுமன்தீா்த்தம் நோக்கிச் சென்றனா். அப்போது பொய்யப்பட்டி மேட்டு மாரியம்மன் கோயில் பகுதியில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இளைஞா்கள் இருவரும், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.