செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

சாலையோர கல்லில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :20 ஜூலை 2026, 1:51 am IST

அரூா் அருகே சாலையோர கல்லில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், பையா்நாய்க்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சம்பத் மகன் பரசுராமன் (43). தொழிலாளி. இவா், தமது சொந்த வேலை காரணமாக அனுமன்தீா்த்தம் சென்றுவிட்டு, கைலாயபுரம்-பொய்யப்பட்டி சாலையில் தீா்த்தமலை நோக்கி வந்துள்ளாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த அவா், கைலாயபுரம் அருகே சாலையோரம் இருந்த கல்லில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.