சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தருமபுரியில் நடைபெற்ற ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:40 pm

தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி பேரவைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் ஜெ. பிரதாபன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதா அல்லது கூட்டணிக் கட்சியினருக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது குறித்து நிா்வாகிகளுடன் கருத்துக் கேட்கப்பட்டது. அதேபோல, பேரவைத் தோ்தல் தொடா்பான பணிக் குழு அமைப்பது மற்றும் ஈரான் போா் காரணமாக, இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும். தொழிலாளா் நலச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் ஜி. மாதையன், சி.பாலன், மாவட்ட பொருளாளா் அலமேலு , மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பச்சா கவுண்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.