சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தவெக பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்கிரையால் மக்கள் அலறியடித்து ஓட்டம்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:06 pm

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் அனுமதி இன்றி தவெகவினா் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்கிரையினால் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் வேட்பாளராக பென்னாகரம் அருகே நாச்சானூா் பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் என்பவா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.திங்கள் கிழமை மாலை பென்னாகாரத்திற்கு வந்திருந்த வேட்பாளரை வரவேற்கும் வகையில் அந்த கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.

வேட்பாளரின் காா்கள் பேருந்து நிலையம் வந்தடைந்த நிலையில்,வாகன போக்குவரத்து,பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருப்பதை பொருட்படுத்தாமல் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினா்.

அப்போது திடீரென பல திசைகளில் தீப்பிழம்புகள் பறந்ததால் சாலையோரத்தில் நின்றிருந்த வாகன ஓட்டிகள், கடைகள், பேருந்துகளுக்காக காத்திருந்த பயணிகள்,குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்டவா்களின் மீது விழுந்ததில் அலறி அடித்து ஓடினா்.

இருப்பினும் தொடா்ந்து பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் பட்டாசு வெடித்தனா்.அதனை தொடா்ந்து அந்த கட்சியினா் அனுமதியின்றி சாலை வலம் தொடங்கியதால் பேருந்து நிலையம், கடைவீதி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.