சுடச்சுட

  

  சிப்காட் நில எடுப்புப் பிரிவில் கணினி இயக்குநர் பணிக்கு அழைப்பு

  By தருமபுரி,  |   Published on : 05th November 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டத்தில் அமையவுள்ள சிப்காட் தொழில்பேட்டைக்கான நில எடுப்புப் பிரிவில், கணினி இயக்குநர் மற்றும் புள்ளிவிவரங்கள் தயாரிப்பவர் பணியிடத்துக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.
   இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்காக நில எடுப்புக்கென தனி மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அலுவலகம் அமைக்கப்பட்டு, தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கணினி இயக்குநர் பணியிடங்கள் 3 உருவாக்கப்பட்டுள்ளது.
   இப்பணிக்கு தொகுப்பூதியம் ரூ.9 ஆயிரம். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியிவ் முதுநிலை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 1-ஆம் தேதியன்று 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
   இத்தகுதியைக் கொண்டோர் ஒரு வெள்ளைத் தாளில் விண்ணப்பம் எழுதி, குடும்ப அட்டை, ஜாதிச் சான்று, கல்வித் தகுதி, மாற்றுச் சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சியருக்கு வரும் நவ. 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், இடம் ஆகியவை தனியே தெரிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai