மத்திய அரசின் கிராம ஸ்வராஜ் அபியான் திட்டம் மூலம் தருமபுரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 25 கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் வரும் ஏப். 20ஆம் தேதி தொடங்கும் என இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேலம் மண்டல உதவி மேலாளர் (எரிவாயு விற்பனைப் பிரிவு) கே. கீத்துமோல் தெரிவித்தார்.
தருமபுரியில் அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏழை, எளிய பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, கிராம ஸ்வராஜ் அபியான் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் இதற்காக 21,058 கிராமங்கள் தேர்வுசெய்யப்பட்டு அவற்றிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்துக்காக பாடி, சிவாடி உள்ளிட்ட 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் வரும் ஏப். 20ஆம் தேதி தொடங்குகின்றன.
எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அரசின் இலவச வீடு கட்டிக் கொடுக்கப்பட்டோர், 35 கிலோ அரிசி பெறுவோர், வனவாசிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தீவுகளில் வசிப்போர் இத்திட்டத்தில் பயன்பெறலாம். தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த மாவட்டம் முழுவதும் செயல்படும் 21 எரிவாயு முகவர்கள் பயன்படுத்தப்படுவர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து

இன்றைய ராசி பலன்கள் (மே 18 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு எப்படி?

கும்ப ராசிக்கு அனுகூலம்: இன்றைய ராசி பலன்கள்!

திரைப்படக் கல்வியின் அவசியம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
