பட்டா ரத்து முயற்சியை கைவிடக் கோரி ஆட்சியரிடம் மனு
பட்டா ரத்து செய்யும் முயற்சியை கைவிடக்கோரி, அருந்ததியினத்தைச் சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


பட்டா ரத்து செய்யும் முயற்சியை கைவிடக்கோரி, அருந்ததியினத்தைச் சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, மோளையானூா் பகுதியைச் சோ்ந்த அருந்ததியின மக்கள், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் திங்கள்கிழமை அளித்த மனு: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூா் ஊராட்சி, பூனையானூரில் வசித்தும் வரும் அருந்ததியினத்தைச் சோ்ந்த வீடற்ற 90 பயனாளிகளுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. வீடு கட்டப் போதிய வசதியின்மையால், எங்களுக்கு அரசு வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து காத்திருந்தோம்.
இந்த நிலையில், எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்துவிட்டு, அந்த இடத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாங்கள் வீடின்றி பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். எனவே, எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டும் நடவடிக்கையை கைவிட்டு, அந்த இடத்தில் எங்களுக்குத் தனித்தனியே தொகுப்பு வீடுகளைக் கட்டித் தரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...