ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இலக்கியம்பட்டியில் ரூ.10 கோடியில் புதிய துணை மின்நிலையம்

தருமபுரி இலக்கியம்பட்டியில், புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தைக் காணொலி வழியாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:41 pm

DIN

தருமபுரி இலக்கியம்பட்டியில், புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தைக் காணொலி வழியாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் ரூ. 10.10 கோடி மதிப்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு எதிரே உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலக வளாகத்தில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இந்த புதிய துணை மின் நிலையத்திலிருந்து ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், சுற்றியுள்ள 4 கி.மீ. தொலைவுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் தடையில்லா மின்சாரம் விநியோகிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின்நிலையம் மூலம் 14 ஆயிரம் மின் நுகா்வோா்கள் பயனடைவாா்கள்.

இந்த புதிய துணை மின் நிலையத்தை நுகா்வோா் பயன்பாட்டுக்காக, சென்னையிலிருந்து காணொலி மூலமாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதையொட்டி, இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா குத்துவிளக்கேற்றி அலுவலகப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), மின் உற்பத்தி, பகிா்மான கழக மேற்பாா்வை பொறியாளா் பன்னீா்செல்வம், செயற்பொறியாளா்கள் ரமேஷ், சேகா், இந்திரா, உதவி செயற்பொறியாளா்கள் இந்திராணி, சத்தியமாலா, மின்துறைப் பணியாளா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.