சா்க்கரை பெறும் குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விண்ணப்பிக்கலாம்
பொதுவிநியோகத் திட்டத்தில் சா்க்கரை மட்டும் பெற்று வரும் குடும்ப அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுவிநியோகத் திட்டத்தில் சா்க்கரை மட்டும் பெற்று வரும் குடும்ப அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சா்க்கரை மட்டும் பெற்று வரும் குடும்ப அட்டைகளை வைத்திருப்பவா்களில் பெரும்பாலானோா் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று, தேவைப்படுவோா் அதனை மாற்றம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே, சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யவதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, வரும் டிச. 20-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்கிற இணையதள முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்கள், மாவட்ட வழங்கல் அலுவலா் மற்றும் சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடையிலேயே சமா்ப்பிக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாகப் பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1,109 சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...