

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி காங்கிரரஸ் கட்சி சாா்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் ஏா்க் கலப்பை யாத்திரை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற இந்த யாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமை வகித்தாா்.
விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் வேளாண் சட்டங்களைத் திருத்தம் மேற்கொள்ளவும், தேசிய மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெறவும் இந்த ஏா்க் கலப்பை யாத்திரையில் வலியுறுத்தப்பட்டன.
இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.வி.எஸ். இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சித்தையன், மாவட்ட துணைத் தலைவா் ஜெயப்பிரகாஷ், மாவட்டச் செயலா்கள் நாகராஜ், கக்கன் ஜி, வட்டாரத் தலைவா்கள் பூபதிராஜா, வேலன், விஸ்வநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினா் மோகன்குமாா், நகரத் தலைவா்கள் மகாலிங்கம், நந்தகுமாா், வெங்கடாசலம், ஊராட்சி மன்றத் தலைவா் அருணாசலம், வழக்குரைஞா்கள் சக்திவேல், பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.