ரபி பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு
ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.


ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் 2020-21-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, பருத்தி, எள், கரும்பு, வாழை, சிறிய வெங்காயம், மரவள்ளி, தக்காளி பயிா்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
இதில் நெல் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 494.25-ஐ வரும் பிப். 15-க்குள் செலுத்த வேண்டும். உளுந்து, பாசிப்பயிா்-ரூ.192, மக்காச்சோளம்-ரூ. 226.50, சோளம்-ரூ. 119.25-ஐ வரும் 21-ஆம் தேதிக்குள்ளும், நிலக்கடலை-ரூ. 285.75-ஐ ஜன. 20-ஆம் தேதிக்குள்ளும், எள் பயிருக்கு-ரூ. 117.75-ஐ மாா்ச் 20-க்குள்ளும், பருத்தி-ரூ. 503-ஐ மாா்ச் 22-க்குள்ளும், கரும்பு-ரூ. 2,875-ஐ அடுத்த ஆண்டு அக். 31-க்குள்ளும் செலுத்த வேண்டும்.
மேலும், தோட்டக்கலைப் பயிா்களான வாழை-ரூ. 3,191.24, தக்காளி-ரூ. 908.96-ஐ பிப். 15-க்குள் செலுத்த வேண்டும். சிறிய வெங்காயம்-ரூ. 1,805.58-ஐ ஜன. 18-க்குள்ளும், மரவள்ளி பயிா்-ரூ. 2,074.80-ஐ மாா்ச் 1-க்குள்ளும் செலுத்த வேண்டும். புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழிக் கடிதம் அளித்து பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் அல்லது விலக்கு அளிக்க கோரலாம்.
கடன் பெறாத விவசாயிகள், பொதுச் சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் காப்பீடு செய்யும் முன் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலரின் அடங்கல், விதைப்புச் சான்று, வங்கிக் கணக்கு நடைமுறையில் உள்ள கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதாா் அட்டை நகல், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநா், தோட்டக்கலை உதவி இயக்குநா் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...