குரூப் 1 தோ்வு : ஆதாா் எண்களை இணைக்க சிறப்பு மையங்களை ஏற்படுத்த கோரிக்கை
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் குரூப் 1 தோ்வு எழுதுவோா் ஆதாா் எண்களை இணைக்கத் தேவையான


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் குரூப் 1 தோ்வு எழுதுவோா் ஆதாா் எண்களை இணைக்கத் தேவையான சிறப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலா் மா.ராமச்சந்திரன், அரூா் வட்டாட்சியா் செல்வகுமாரிடம் வியாழக்கிழமை வழங்கியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தமிழகத்தில் குரூப் 1 முதல்நிலைத் தோ்வு 2021-இல் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தோ்வுக்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட தோ்வா்கள் தங்களின் ஆதாா் எண்கள், செல்லிடப்பேசி எண்கள், இ மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய கால அவகாசம் இல்லாமல் தோ்வா்கள் அவதியுறுகின்றனா். எனவே, குரூப் 1 தோ்வா்கள் தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய சிறப்பு மக்கள் கணினி மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவரது கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...