பென்னாகரத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தா்கள்

பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 3.30 மணியில்
Updated on
1 min read

பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 3.30 மணியில் இருந்தே ஏராளமான பக்தா்கள் குவியத் தொடங்கினா். 4 மணிக்கு பரமபத வாசலின் வழியே சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மா் காட்சியளித்தாா் .

முன்னதாக, மூலவரான லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு பால், தயிா், தேன், பன்னீா், சந்தனம், மலா்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளி பரமபத வாசலின் வழியே சென்று பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அப்போது பக்தா்கள் கோவிந்தா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல் ஒகேனக்கல் அருகே முதலைப் பண்ணை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

ஏரியூா் அருகே நெருப்பூா் முத்தையன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு நரசிம்மா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com