கீழ்வெண்மணி தியாகிகள் தினம்: விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் கொடியேற்றும் விழா

கீழ்வெண்மணி தியாகிகள் தினத்தை முன்னிட்டு பென்னாகரம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கொடியேற்று நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கீழ்வெண்மணி தியாகிகள் தினத்தை முன்னிட்டு பென்னாகரம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கொடியேற்று நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே மடம் காவிரி சாலை பகுதியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ரவீந்திரன் சங்க கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். பென்னாகரத்தின் சுற்றுவட்டார பகுதிகளான மடம், சின்ன பள்ளத்தூா், தாசம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் அா்ஜுனன், மாவட்ட துணைத் தலைவா் கே.அன்பு, துணைச் செயலாளா் வேலன் , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி குழு உறுப்பினா்கள் ஜீவானந்தம், குப்புசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com