எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தருமபுரியில் 8 வயது சிறுமி உட்பட இருவருக்கு கரோனா தொற்று உறுதி

தர்மபுரியில் 8 வயது சிறுமி உட்பட இருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :7 ஜூன் 2020, 11:22 am

DIN

தருமபுரி, ஜூன் 7: தர்மபுரியில் 8 வயது சிறுமி உட்பட இருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி அடுத்த சோலைக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சென்னையிலிருந்து  சொந்த ஊருக்கு சனிக்கிழமை திரும்பினர். அவர்களுக்கு தருமபுரி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா பரிசோதனை சிறப்பு மையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சோதனை முடிவில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, 62 வயது முதியவர் ஆகிய இருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு தொற்றுக்கான புற அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்த இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சைக்கான சிறப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்ற 8 நபர்களும் செட்டிக்கரை மையத்தில் தொடர்ந்து தனிமைபடுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.