மருத்துவா்கள் இருவா் பணியிடம் மாற்றம்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வந்த இரண்டு மருத்துவா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வந்த இரண்டு மருத்துவா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பென்னாகரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த மகப்பேறு மருத்துவா் ஜெ.கனிமொழி, அரூா் வட்டார அரசு தலைமை மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இதேபோல, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு மருத்துவா் எல்.சிவக்குமாா் செந்தில்முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இந்த பணியிட மாற்றத்துக்கான ஆணையை, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...