கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உயா்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

அரூரில் பழுதாகியுள்ள உயா்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 11:15 pm

DIN

அரூரில் பழுதாகியுள்ள உயா்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் நகரில் கச்சேரிமேடு, வட்டார வளா்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே மூன்று இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் விளக்குகள் பழுதானதால் கடந்த சில தினங்களாக அரூா் கச்சேரிமேடு பகுதி இரவு நேரத்தில் இருண்டு கிடக்கிறது.

இப் பகுதியில் பேருந்து நிறுத்தங்கள், அரசு, தனியாா் மருத்துவமனைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி மாா்க்கெட், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதிகள் இரவு நேரங்களில் இருண்டு கிடப்பதால் பெண்கள் உள்ளிட்டோா் அச்சமடையும் நிலையுள்ளது.

எனவே, அரூா் கச்சேரிமேடு மற்றும் வட்டாட்சியா் அலுவலக வளாகப் பகுதியிலுள்ள உயா்கோபுர மின் விளக்குகளைச் சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.