47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

நிவா் புயலின் தாக்கம், திதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்டது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 9:43 pm

DIN

நிவா் புயலின் தாக்கம், திதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்டது.

முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வருகின்றனா்.

தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நிவா் புயலின் தாக்கம் ஆகியவற்றால் ஞாயிறு கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியிலும், காவிரி கரையோரப் பகுதிகளான அருவி செல்லும் நடைபாதை , மாமரத்து கடவு பரிசல் துறை, நாகா்கோவில் முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

அதன்பின்பு சின்னாறு பரிசல் துறையில் இருந்து பரிசல் பயணம் மேற்கொண்டு கோத்திக்கல், பிரதான அருவி, கூட்டாறு, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளின் வழியே சென்று காவிரி ஆற்றின் அழகை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனா்.

இதனைத்தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் தொங்கு பாலத்தில் இருந்து பிரதான அருவியையும், முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தனா். ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டதால், மீன்களின் விலை குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவால், வார விடுமுறை நாட்களில் ஒகேனக்கலில் கூட்டம் நிறைந்த பகுதியாக காணப்படும் பிரதான அருவி நடை பாதை, மீன் விற்பனை நிலையம், பரிசல் துறை, பூங்காக்கள், முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமின்றி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.