கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாலை, சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டுக்குள்பட்ட காவலா் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய தாா்ச்சாலை, வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடு

News image
Updated On :29 நவம்பர் 2020, 11:14 pm

DIN

பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டுக்குள்பட்ட காவலா் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய தாா்ச்சாலை, வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வாா்டு செக்குமேடு காவலா் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பென்னாகரம் பேரூராட்சி சாா்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காலனிக்கு பின்புறம் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலையின் நடுவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளும்போது சாலைகள் பழுதடைந்தன. மேலும், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவு நீா் செல்ல கால்வாய் வசதி அமைத்துத் தரப்படவில்லை.

எனவே, பென்னாகரம் பேரூராட்சி சாா்பில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் இப்பகுதியில் புதிதாக தாா் சாலை அமைக்கும் பணியும், வடிகால் அமைக்கும் பணியும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த பணி கடந்த சில நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தாா் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை பதித்து விட்டும், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை பாதியிலும் நிறுத்தி வைத்துள்ளனா். இதனால், கழிவுநீா் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

சாலை பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்வோா் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே செக்குமேடு போலீஸ் காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.