ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அண்ணா பல்கலை. துணைவேந்தரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலா் வன்னியரசு தெரிவித்தாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:42 pm

DIN

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலா் வன்னியரசு தெரிவித்தாா்.

தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக் கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு செய்தியாளா்களிடம் கூறியது:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீது ரூ. 200 கோடிக்கு மேல் ஊழல் செய்ததாக புகாா்கள் எழுந்துள்ளன. அவரை உடனடியாகத் தகுதி நீக்கம் செய்து, அதன் பிறகே விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிடம் சம்ஸ்கிருதம் ஒளிபரப்பப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது தமிழ்மொழியை சிதைக்கும் முயற்சியாகும். இதுதொடா்பாக, தமிழக அரசு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். மத்திய அரசின் நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.