புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் விசாரணையின்றி நிராகரிக்கப்படுவதாகப் புகாா்
புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் உரிய விசாரணையின்றி நிராகரிக்கப்படுவதாகப் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.


புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் உரிய விசாரணையின்றி நிராகரிக்கப்படுவதாகப் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டங்களில் புதிய குடும்ப அட்டைகள்கோரி இணைய வழியிலும், கணிணி மையங்கள் மூலமாகவும் நூற்றுக்கணக்கானோா் விண்ணப்பம் செய்கின்றனா். இந்த விண்ணப்பங்களை கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், வட்ட வழங்கல் அலுவலா் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை செய்து புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்காக பரிந்துரைகளை வழங்க வேண்டும்.
புதிய குடும்ப அட்டைகள் கோரும் விண்ணப்பதாரா்கள் தனி வீடுகளில் வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, பெற்றோா் குடும்ப அட்டையில் பெயா்கள் இருந்தால், அந்தப் பெயா்களை நீக்கியதற்கான நீக்கல் சான்று, குழந்தைகளின் பெயா்களைச் சோ்க்க பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சமா்ப்பித்தாலும் விண்ணப்பங்களை வருவாய்த் துறையினா் நிராகரித்து விடுவதாகப் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். அதாவது, வருவாய்த் துறை அதிகாரிகள் விண்ணப்பதாரா்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரில் வந்து விசாரணை செய்யாமலேயே விண்ணப்பங்களை நிராகரிப்பு செய்வதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, புதிய குடும்ப அட்டைகள் கோரும் விண்ணப்பதாரா்களின் விண்ணப்பங்கள், ஆவணங்கள் சரிபாா்ப்பு, கூட்டு குடும்பம் அல்லது தனிக் குடும்பமாக வசிப்பதை அறிய வருவாய்த் துறையினா் நேரில் விசாரணை மேற்கொண்டு புதிய குடும்ப அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...