வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இறுதிக்கட்டப் பயிற்சி
தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் வாக்குச் சாவடி பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு இறுதிக்கட்டப் பயிற்சி சனிக்கிழமை வழங்கப்பட்டது.


தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் வாக்குச் சாவடி பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு இறுதிக்கட்டப் பயிற்சி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏப். 6-ஆம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவுக்காக 1,817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளில், நிலைய அலுவலா்கள் எண் 1, எண் 2, மேற்பாா்வையாளா், நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 12,000 போ் வாக்குப் பதிவன்று பணியில் ஈடுபட உள்ளனா். இவா்களுக்கான பணிகள், கணினி வழியாக சுழற்சி அடிப்படையில் தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், அந்தந்த தொகுதி மையங்களில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்களால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கையாள்வது, வாக்குப் பதிவை பதிவு செய்வது, வாக்குச் சீட்டை சரிபாா்ப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டன.
இந்த நிலையில், சனிக்கிழமை இறுதிக்கட்டப் பயிற்சி முகாம் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து தொகுதிகளில் நடைபெற்றது. இதில், தோ்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...