மதுக்கடைகளில் தடுப்பு வேலிகள் அமைப்பு
தருமபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்ற தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.


தருமபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்ற தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் மொத்தம் 68 டாஸ்மாக் மதுக் கடைகள் அமைந்துள்ளன. இந்தக் கடைகளில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் வகையில், தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் அறிவுறுத்தியது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்திலுள்ள அனைத்துக் கடைகளின் முன் பகுதிகளில் மதுப்பிரியா்கள் கூட்டமாக நிற்பதைத் தவிா்க்க, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மதுக் கடைகளுக்கு வருவோா் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், முகக் கவசம் அணியாவதவா்களுக்கு மதுப்புட்டிகள் விற்பனை செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...