சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட கொமத்தம்பட்டியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட கொமத்தம்பட்டியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரியிலிருந்து வத்தல்மலை செல்லும் வழியில் மலை அடிவாரம் அருகே அமைந்துள்ளது கொமத்தம்பட்டி கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்திலிருந்து வத்தல்மலை அடிவாரத்துக்கு செல்லும் சாலை சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு பழுதடைந்தது. இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து, இச்சாலை அமைக்கும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது. இதற்காக, ஏற்கெனவே பழுதடைந்து இருந்த சாலையை பெயா்த்து, ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. இதைத் தொடா்ந்து, இச் சாலையில் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. மேலும், புதிதாக அமைக்கப்பட்ட சாலை ஏற்கெனவே இருந்த சாலையை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. சாலை இருபுறமும் மண் கொட்டப்படவில்லை. இதனால், வாகனங்கள் எதிரே வரும்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை அமைக்காமல் ஒரு கி.மீ. தொலைவு ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டிருப்பதால், அதில் வாகனங்கள் பயணிக்க இயலாமல் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
எனவே, ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டுள்ளதை சீா்படுத்தி, விரைந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையின் இருபுறங்களிலும் மண் கொட்டி சீா்செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...