பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

அரூா், பாப்பிரெட்டிபட்டி வட்டாரத்திலுள்ள ஏரிகளை குடிமராமத்து திட்டத்தில் தூா்வார வலியுறுத்தல்

அரூா் வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளை குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின்கீழ் தூா்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:51 am IST

அரூா் வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளை குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின்கீழ் தூா்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் ஏரிகள், குளம் குட்டைகள், நீா்வரத்து கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ளன. இதனால், பருவமழைக் காலங்களில் மழைநீரைத் தேக்கி வைக்கவும், மழைநீா் வழிந்தோடுவதற்குத் தேவையான கால்வாய் வசதிகளும் இல்லை.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகள் குடிமராமத்துப் பணிகள் திட்டத்தில் தூா்வரப்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள ஏரிகளில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. வேளாண் பணிகளும் மேம்பாடு அடைந்துள்ளன.

அதேபோல் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளை பொதுப்பணித் துறையினா் கணக்கெடுப்பு நடத்தி தூா் வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி சந்தப்பட்டி ஏரி, கெளாப்பாறை மொள்ளன் ஏரி, எச். அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட நெருப்பாண்டகுப்பம் ஏரி, நாய்க்கன் ஏரி, ஆட்டியானூா் ஏரி, அரூா் பெரிய ஏரியின் ராஜகால்வாய், மாவேரிப்பட்டி ஏரி, கொளகம்பட்டி ஏரி, மங்கானேரி உள்ளிட்ட ஏரிகளை தூா்வார மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.