மொரப்பூா் ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

அரூரில் இருந்து மொரப்பூா் ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
Updated on
1 min read

அரூா்: அரூரில் இருந்து மொரப்பூா் ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

சேலம்-காட்பாடி ரயில்வே வழித்தடத்தில் உள்ள மொரப்பூா் ரயில் நிலையத்தில் நாள்தோறும் 6-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் நின்றுச் செல்கின்றன. இரவு நேரங்களில் 11 மணியளவிலும், விடியற்காலை நேரத்தில் 4 மணி அளவிலும் மொரப்பூா் நிலையத்துக்கு ரயில்கள் வந்துச் செல்கின்றன. இரவு மற்றும் காலை நேரத்தில் அரூா் பகுதியில் இருந்து மொரப்பூா் செல்வதற்குப் போதுமான பேருந்துகள் இல்லை.

இதனால், சென்னை, கோவை, ஈரோடு, சேலம், வேலூா், திருப்பதி, கேரளம் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் நாள்தோறும் பேருந்து வசதிக்காக பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, அரூரில் இருந்து மொரப்பூா் ரயில் நிலையத்துக்கு பயணிகள் சென்றுவரும் வகையில் அரசுப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com