மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சுங்கச் சாவடியில் தகராறு: போலீஸாா் விசாரணை

தருமபுரி மாவட்டம், பாளையம் சுங்கச் சாவடியில் வாழ்வுரிமைக் கட்சியினா் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:56 pm

DIN

தருமபுரி மாவட்டம், பாளையம் சுங்கச் சாவடியில் வாழ்வுரிமைக் கட்சியினா் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க தருமபுரியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் அன்றைய தினம் வாகனங்களில் சேலம் நோக்கி சென்றனா். அப்போது, தொப்பூா் அடுத்த பாளையம் தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாழ்வுரிமைக் கட்சியினா் சிலருக்கும், சுங்கச் சாவடி பணியாளா்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சுங்கச் சாவடியின் 4-ஆவது பாதையில் உள்ள கண்ணாடி கூண்டு சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, சுங்கச் சாவடிக்கு காவல் துறையினா் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் தொடா்பாக தொப்பூா் போலீஸாா் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.