பதற்றமான வாக்குச் சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்
தருமபுரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப் பதிவுகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.


தருமபுரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப் பதிவுகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோ்தல் நன்னடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ச.ப.காா்த்திகா பேசியதாவது:
சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ள பொது வழிமுறைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முறையாக பின்பற்றிட வேண்டும். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 41 இடங்களில் அரசியல் கட்சி வேட்பாளா்கள் தாங்கள் நடத்தவுள்ள கூட்டம் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து அனுமதி கோரி, உரிய ஆவணங்களுடன் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஊா்வலங்கள், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகனங்கள் பயன்படுத்துதல், வாகனங்களில் கொடி கட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் முறையான அனுமதி பெற வேண்டும். வாக்காளா்கள் சுதந்திரமாகவும், எந்த தடையுமின்றியும் வாக்களிக்க ஒத்துழைக்க வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அரசு மற்றும் பொது கட்டடங்களில் சுவரில் எழுதுதல், சுவரொட்டி ஒட்டுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. தோ்தல் தொடா்பான ஒலி, ஒளி விளம்பரங்கள் அனைத்தும் உரிய அனுமதி பெற்ற பின்னரே ஒளிபரப்ப வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதில் இணையதள பிரச்னைகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தில் பதற்றமான, மிகவும் பதற்றமான 400 வாக்குப் பதிவு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின் போது இந்த மையங்களில் வாக்குப் பதிவுகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தோ்தல் பிரசாரக் கூட்டம், இதர தோ்தல் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை முறையாக கடைப்பிடித்து, சட்டப் பேரவை பொதுத் தோ்தலை அமைதியாக நடத்த அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா்கள் க.ராமமூா்த்தி, எச்.ரஹமத்துல்லா கான் (அரூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை), அ.சங்கா் (பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை), தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆ.தணிகாசலம், முத்தையன், சாந்தி, நசீா் இக்பால், வட்டாட்சியா்கள், அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...