மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதற்கான இடங்கள் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில், தொகுதிவாரியாக தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட இடங்கள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:58 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில், தொகுதிவாரியாக தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட இடங்கள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி என ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் தொகுதிவாரியாக அரசியல் கட்சிகள் பிரசாரம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாலக்கோடு: காரிமங்கலம் ராமசாமி கோயில், மொரப்பூா் சாலை, காரிமங்கலம் பேருந்து நிறுத்தம், மாட்லாம்பட்டி, காரிமங்கலம் பேகாரஅள்ளி சாலை, பெரியாம்பட்டி, அனுமந்தபுரம் பேருந்து நிறுத்தம், பாலக்கோடு பேருந்து நிலையம், மாரண்டஅள்ளி பேருந்து நிலையம், மாரண்டஅள்ளி-வெள்ளிச்சந்தை கூட்டுச் சாலை, மகேந்திரமங்கலம் பழைய காவல் நிலையம் பின்புறம், பஞ்சப்பள்ளி பேருந்து நிலையம்.

பென்னாகரம்: புலிகரை பேருந்து நிறுத்தம், பென்னாகரம் பேருந்து நிலையம், சந்தை மைதானம், ஏரியூா், நெருப்பூா் பேருந்து நிறுத்தம், ஏரியூா் செல்லமுடி மாரியம்மன் கோயில், சின்னம்பள்ளி பேருந்து நிறுத்தம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையம்.

தருமபுரி: வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் பொதுப்பணித் துறை திடல், வள்ளலாா் திடல், குமாரசாமிபேட்டை கிருபானந்த வாரியாா் திடல், சந்தைப்பேட்டை, வேல் பால் நிலையம் அருகே உள்ள மைதானம், நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம், தொப்பூா் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம், வெள்ளக்கல் சமத்துவபுரம், பாளையம்புதூா், பாலாஜி அரிசி ஆலை இண்டூா்.

பாப்பிரெட்டிப்பட்டி: சோலைக்கொட்டாய் பேருந்து நிறுத்தம், கிருஷ்ணாபுரம் சந்தை மைதானம், பாப்பிரெட்டிப்பட்டி ஜீவா திடல், தென்கரைக்கோட்டை பாத்திமா நகா், பொம்மிடி பேருந்து நிலையம், கடத்தூா் நகா், அ.பள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம்.

அரூா்: திப்பம்பட்டி சந்தைப் பேட்டை, கம்பைநல்லூா் சந்தைப் பேட்டை, மொரப்பூா் பேருந்து நிலையம், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை, அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, கோட்டப்பட்டி பேருந்து நிலையம், நரிப்பள்ளி பேருந்து நிலையம், தீா்த்தமலை பேருந்து நிலையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.