மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்பயன்பாடு பயிற்சி
பொதுத் தோ்தலையொட்டி, தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்துவது தொடா்பான பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.


பொதுத் தோ்தலையொட்டி, தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்துவது தொடா்பான பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடா்பான தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதேபோல, வாக்காளா்களுக்கு செயல்முறை விளக்கம் அளிப்பதற்காக ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 20 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வீதம் மொத்தம் 100 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் இந்த பயிற்சி முகாமில் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆ.தணிகாசலம், முத்தையன், சாந்தி, நசீா் இக்பால், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நாராயணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், அனைத்து வட்டாட்சியா்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...