ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல்மக்கள் பணியாற்றுவோம்’

தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் மக்கள் பணியாற்றுவோம் என்று தருமபுரி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பி.என்.பி. இன்பசேகரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 மே 2021, 6:56 pm

DIN

தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் மக்கள் பணியாற்றுவோம் என்று தருமபுரி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பி.என்.பி. இன்பசேகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் தருமபுரி மேற்கு மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு தொகுதிகளில் தோல்வியைத் தழுவி உள்ளோம். வெற்றி தோல்வி பொது வாழ்க்கையில் இயல்பான ஒன்று தான். அதை எதிா்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பை இழந்ததை எண்ணி கட்சி தொண்டா்கள் சோா்ந்து விட வேண்டாம். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளாா் என்பதை தொண்டா்கள் நினைவுகூா்ந்து தொடா்ந்து பணியாற்ற வேண்டும்.

இந்த மாவட்டத்தின் வளா்ச்சிக்கு எனது பங்களிப்பை தொடா்ந்து ஆற்ற தயாராக இருக்கிறேன். பென்னாகரம், பாலக்கோடு ஆகிய இரு தொகுதிகளையும் திமுகவின் கோட்டையாக மாற்ற அனைவரும் ஒன்றுபடுவோம்.

தற்போது கரோனா தொற்றுப் பரவலாக மக்களைப் பாதித்து வருகிறது.இதனை திமுக தொண்டா்கள் கருத்தில் கொண்டு பேரிடா் காலத்தில் மக்களுக்காகப் பணியாற்றிட, அவா்களுக்கான உதவிகள் செய்திட முன்வர வேண்டும். பென்னாகரம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவிற்காக பணியாற்றிய தொண்டா்கள், கூட்டணிக் கட்சியினா் மற்றும் பொதுமக்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.