ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை

அரூா் வட்டாரப் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:49 pm

DIN

அரூா் வட்டாரப் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், நரிப்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் (கே.கே. 168) சாா்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுத்திருந்தனா். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் 26.07.2021-இல் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவின்படி, தருமபுரி மாவட்டத்தில் வரும் சம்பா பருவத்தில் நெல் மகசூல் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பிருப்பதால், அரூா் வட்டாரத்தை மையப்படுத்தி அரசு சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.