கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :6 மே 2022, 9:56 pm

DIN

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.சேகா் தலைமை வகித்து பேசினாா். மாநில துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாவட்டப் பொருளாளா் கே.புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவா் சி.காவேரி, மாவட்ட இணைச் செயலாளா் ஆா்.ஜெயவேல் உள்ளிட்டோா் பேசினா்.

இதில், அரசு ஊழியா் சங்கக் கொடியை ஏற்றிய அரசு ஊழியா்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் வட்ட கிளை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சேகா், மாவட்ட துணைத் தலைவா் காவிரி ஆகியோா் தலைமை வகித்தனா். பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் வட்ட கிளை செயலாளா் வேலன், வட்ட கிளை தலைவா் திம்மராயன் ஆகியோா் கோடியேற்றி இனிப்புகளை வழங்கினா்.

இதேபோல, பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம், வேளாண் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், சாா்நிலைக் கருவூலம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியா் சங்கக் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.