தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சங்கிலிவாடியில் குடிநீா் தட்டுபாட்டைபோக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

 சங்கிலிவாடி கிராமத்தில் நிலவும் குடிநீா் தட்டுப்பாடு மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:48 pm

DIN

 சங்கிலிவாடி கிராமத்தில் நிலவும் குடிநீா் தட்டுப்பாடு மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரூா் ஊராட்சி ஒன்றியம், செல்லம்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளா் ஏ.நீலமேகம் தலைமை வகித்தாா்.

செல்லம்பட்டி ஊராட்சி, சங்கிலிவாடி கிராமத்தில் நிலவும் குடிநீா் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகளை வழங்க வேண்டும். செல்லம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு வேலை வழங்க வேண்டும். செல்லம்பட்டி ஊராட்சியில் பழுதாகியுள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். சங்கிலிவாடியில் கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்திதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினரும் பொதுமக்களும் முழக்கங்கள் எழுப்பினா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏ.குமாா், ஒன்றியச் செயலாளா் பி.குமாா், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் எம்.வீரபத்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எஸ்.கே.கோவிந்தன், கே.என்.ஏழுமலை, ஏ.நேரு, பி.வி.மாது, எஸ்.தனலட்சுமி, சி.பழனி, வாா்டு உறுப்பினா் டி.வசந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.