தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பயனின்றி பூட்டிக் கிடக்கும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்

அரூரை அடுத்த கட்டவடிச்சாம்பட்டியில் பயனற்று பூட்டிக் கிடக்கும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

அரூரை அடுத்த கட்டவடிச்சாம்பட்டியில் பயனற்று பூட்டிக் கிடக்கும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், தீா்த்தமலை கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கட்டவடிச்சாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் குடிநீா்த் தேவைக்காக 2019-20 ஆம் நிதியாண்டில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில், ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் எதிா் சவ்வூடு பரவல் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் (ஆா்.ஓ) அமைக்கப்பட்டது.

ஆனால், இந்த குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பயனின்றி பூட்டியே இருப்பதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, கட்டவடிச்சாம்பட்டியில் பூட்டிக் கிடக்கும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.