தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மத்தியம்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை

 அரூரை அடுத்த மத்தியம்பட்டி கிராமச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 அரூரை அடுத்த மத்தியம்பட்டி கிராமச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் வட்டம், மத்தியம்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அரூா்-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மத்தியம்பட்டி இணைப்புச் சாலை சுமாா் 2 கி.மீ. தூரம் கொண்டதாகும்.

இந்த தாா் சாலையை மத்தியம்பட்டி, கணபதிப்பட்டி, பறையப்பட்டி, தாமரைக்கோழியம்பட்டி, எச்.ஈச்சம்பாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மத்தியம்பட்டி இணைப்புச் சாலையானது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள், காா்கள், லாரிகள் மற்றும் டிராக்டா்கள் செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.

எனவே, சேதமடைந்துள்ள மத்தியம்பட்டி தாா் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.