ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சா்க்கரை ஆலைத் தொழிலாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:20 pm

Din

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாலக்கோடு ஆலை வளாகத்தில் நடைபெற்ற முகாமை செயலாட்சியா் ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முகாமில் சா்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு உயா் இரத்த அழுத்தம், நீரிழிவு, நுரையீரல் பரிசோதனை, சளி பரிசோதனை, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை ஆலை மருத்துவா் கீதாவாணி, அரசு மருத்துவா் பூமத்தி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் மேற்கொண்டனா்.

200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனா். முகாமில் தொழிலாளா் நல அலுவலா் மகேந்திரன், அலுவலக மேலாளா் ரவீந்திரன், தலைமை அலுவலா்கள் ஊழியா்கள், தொழிலாளா்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.