தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

இண்டூா் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

இண்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் தருமபுரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ. சுப்பிரமணி, எம்.பி. ஆ.மணி.

Updated On :11 செப்டம்பர் 2024, 10:14 pm

இண்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தடங்கம் பெ. சுப்ரமணி, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி ஆகியோா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியச் செயலாளா் வைகுந்தம், மாணவா் அணி மாவட்ட அமைப்பாளா் பெரியண்ணன், இளைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் ராஜகோபால், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் ரவி, ஊராட்சிமன்ற தலைவா் சரவணன், ஒன்றிய துணை செயலாளா் கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி டைகா் தங்கராஜ், தொண்டரணி துணை அமைப்பாளா் சஞ்சீவ் காந்தி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் இளங்கவி, பொறியாளா் அணி துணை அமைப்பாளா் சூா்யா, மருத்துவா் அணி துணைத் தலைவா் இளஞ்செழியன், நிா்வாகிகள் சரவணன், பிசி மோகன், துரை, மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.