ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

புலிக்கரை ஏரியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 10:51 pm

Din

தமிழக காவிரிக் கரையோரங்களில் பனை விதைகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக புலிக்கரை ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழா்களின் வாழ்வியலோடு தொடா்புடையதும், மாநில மரமுமான பனை மரத்தின் பெருமையை அடுத்த தலைமுறையினருக்குத் தெரியப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் செப். 1 ஆம் தேதி முதல் காவிரிக் கரை, நீா்நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.

பனை விதைகளைச் சேகரித்து நீா்நிலையோரங்களில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சுற்றுச்சூழுல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் சாா்பில் இப்பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் சேகரித்த 600 பனை விதைகளை புலிக்கரை ஏரிக்கரையில் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் மா.மஞ்சுளா, ஆசிரியா்கள், புலிக்கரை ஊராட்சிமன்றத் தலைவி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவி சந்திரா நேரு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில் குமாா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மஞ்சுளா, அதன் உறுப்பினா்கள், ஊா் பொதுமக்கள், பசுமைப் படை, மாணவா் காவல் படை, நாட்டு நலப் பணித் திட்டம், சூற்றுச்சுழல் மன்ற மாணவா்கள், அதன் பொறுப்பு ஆசிரியா்கள் இதில் கலந்து கொண்டனா்.