/

அரூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

அரூரில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:22 am

Din

அரூரில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரூரில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சிக்கு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலா் கே.சின்னக்கண்ணன் தலைமை வகித்தாா். புத்தகக் கண்காட்சியை அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் தொடங்கி வைத்தாா்.

புத்தக விற்பனையை அரூா் பேரூராட்சி மன்றத் தலைவா் இந்திராணி தனபால் தொடங்கி வைத்தாா். இதில் கவிஞா்கள் ரவீந்திரபாரதி, ஆதிமுதல்வன், பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், திமுக நகரச் செயலாளா் முல்லை ரவி, ஒன்றியச் செயலா் கோ. சந்திரமோகன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், மருத்துவா்கள் க. ஞானசேகரன், வி.கோவிந்தராசு, வழக்குரைஞா்கள் சி.சிற்றரசு, எஸ்.ராமமூா்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எ.கொ.அம்பேத்கா், இலக்கிய ஆா்வலா்கள் ஆா்.நடராஜன், ரா.திருவேங்கடம், நகா்மன்ற உறுப்பினா்கள் மகாலட்சுமி, காதா்பாஷா, ஏ.ஆா்.எஸ்.எஸ். பாபு அறிவழகன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மேலாளா் டி.சத்தியசீலன், ஓய்வூதியா்கள் சங்க பொருளாளா் கோவி.ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூா், வா்ணதீா்த்தம் தெருவில் கலை எலக்ட்ரானிக்ஸ் கடை அருகே அமைந்துள்ள இந்த புத்தகக் கண்காட்சியானது அக்டோபா் 2-ஆம் தேதி வரையிலும் நாள்தோறும் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.