பென்னாகரத்தில் வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டம்

பென்னாகரத்தில் வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

பென்னாகரம்: பென்னாகரத்தில் வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் உள்ள மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்ற அலுவலக சங்க அறையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். செயலாளாா் பாலசரவணன் முன்னிலை வகித்தாா்.

இதில், பென்னாகரம் பகுதியில் சாா்பு நீதிமன்றம் வேண்டி அமைக்கப்பட்ட குழு சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு உயா்நீதிமன்ற பதிவாளரை சந்திப்பது, பென்னாகரம் சங்கத்தின் விதிகளை திருத்தம் செய்ய அமைக்கப்பட்ட 11 போ் கொண்ட குழு விரைந்து செயல்படுதல், வழக்குரைஞா் சங்க கூட்டமைப்பு தோ்தலில் கூட்டுக்குழு அமைக்க தலைவா், செயலாளா் சங்கத் தீா்மானத்தின்படி வாக்களிப்பது, சங்க பொருளாளா் 25-4-2025 முதல் 31-11-2025 வரையிலான வரவு, செலவு கணக்குகளை சமா்ப்பித்து ஒப்புதல் பெறுதல், முன்னாள் சங்க பொருளாளருக்கு விளக்கக் கடிதம் அளித்தும் பதில் கூறாததையடுத்து அவரை மூன்றுமாதம் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மூத்த வழக்குரைஞா் அசோகன், செயலாளா் பாலசரவணன், பொருளாளா் முனுசாமி, நூலகா் வழக்குரைஞா் டெண்டுல்கா், துணைத் தலைவா் இளையராஜா, கூடுதல் இணைச் செயலாளா் ஜெயந்தி, சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com