தருமபுரி
வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்
அரூரை அடுத்த வள்ளிமதுரையில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை (டிச. 17) நடைபெறுகிறது.
அரூா்: அரூரை அடுத்த வள்ளிமதுரையில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை (டிச. 17) நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கீரைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வள்ளிமதுரை கிராமத்தில் புதன்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் முகாமில், மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா்.
இம்முகாமில், கீரைப்பட்டி, வள்ளிமதுரை, தாதராவலசை, தோல்தூக்கி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
