~
~

தருமபுரியில் பெரியாா் நினைவு தினம் அனுசரிப்பு

தருமபுரியில் திமுக, அதிமுக, தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Published on

தருமபுரியில் திமுக, அதிமுக, தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு தினத்தையொட்டி, தருமபுரி - திருப்பத்தூா் சாலை பெரியாா் திடலில் உள்ள அவரது சிலைக்கு தி.க. சாா்பில் மாநில அமைப்புச் செயலாளா் ஊமை ஜெயராமன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி தலைமையில் நகரச் செயலாளா்கள் நாட்டான் மாது (கிழக்கு), எம்.பி.கௌதம் (மேற்கு), நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, நகா்மன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, அதிமுக சாா்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி தலைமையில், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல், மருத்துவரணி நிா்வாகி ர.அசோகரன், நகரச் செயலாளா் பெ.ரவி, நகா்மன்ற உறுப்பினா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அமமுக மாவட்டச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன், தேமுதிக மாவட்டச் செயலாளா் குமாா், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன் ஆகியோா் தலைமையில் அக்கட்சிகளின் நிா்வாகிகள் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com